தற்போது சட்டமன்றத் தேர்தல் பணிகள் தீவிரமாக இருப்பதாலும், பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டியுள்ளதாலும், ஆன்லைன் (Video Conference) மூலம் ஆஜராக அனுமதி கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்த மனு, நாளை (ஏப்ரல் 20, 2026) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையில் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இருப்பினும், தற்போது சட்டமன்றத் தேர்தல் பணிகள் தீவிரமாக இருப்பதாலும், பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டியுள்ளதாலும், ஆன்லைன் (Video Conference) மூலம் ஆஜராக அனுமதி கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சங்கீதா தாக்கல் செய்த மனுவில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

2023-ம் ஆண்டு விஜய் ஒரு பிரபல நடிகையுடன் உறவில் இருந்தது தெரிந்ததாகவும், அதைத் தட்டிக்கேட்டபோது தன்னை மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் விஜய் துன்புறுத்தியதாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது தன்னை நீலாங்கரை வீட்டுக்குள் விஜய் அனுமதிக்க மறுப்பதாகவும், வழக்கு முடியும் வரை அதே வீட்டில் சகல வசதிகளுடன் தங்குவதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

250 கோடி செட்டில்மென்ட் பேச்சுவார்த்தை:

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையே இரு தரப்புக்கும் மும்பையில் இருந்து வந்த ஒரு ஜோசியர் முன்னிலையில் ரகசியப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தெரிகிறது.

விஜய்யின் சொத்து மதிப்பு சுமார் 624 கோடி ரூபாய் என்பதால், தனக்கும் தன் இரு பிள்ளைகளுக்கும் சேர்த்து 250 கோடி ரூபாய் செட்டில்மென்ட் வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். ஆனால், சங்கீதாவுக்கு மட்டும் 35 கோடி ரூபாய் வழங்க விஜய் ஒத்துக்கொண்டதாகவும், பிள்ளைகளைத் தானே வளர்த்துக் கொள்வதாகத் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தற்போது பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாளை நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வழக்கு முடியும் வரை நீலாங்கரை வீட்டிலேயே தான் தங்குவதற்கு அனுமதி கோரி சங்கீதா தொடர்ந்துள்ள மனுவும் நாளை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

அதே சமயம், நாளை சங்கீதா செய்தியாளர்களைச் சந்தித்து விஜய்க்கு எதிரான சில ஆதாரங்களை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருவது தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.