அமைச்சர் வினோத் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில், ரூ. 4 கோடியில் ‘வான்மகள்’ ட்ரோன் பயிற்சித் திட்டம் உட்பட விவசாயிகளுக்கான பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் இன்று காலை 09.30 மணியளவில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும், முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க அறிவிப்பாக, ரூ. 4 கோடி மதிப்பீட்டில் ‘வான்மகள் திட்டம்’ செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 100 மகளிர் உட்பட 500 நபர்களுக்கு ட்ரோன் இயக்குவதற்கான பயிற்சிகளும், உரிமங்களும் வழங்கப்படும். மேலும், பயிற்சி பெற்ற 50 மகளிருக்கு 50 சதவீத மானிய விலையில் ட்ரோன்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். இதனுடன் பல வேளாண் சார்ந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: