CMDA out of cash: கடந்த சில ஆண்டுகளில் நூலகங்கள், ‘முதல்வரின் படைப்பகங்கள்’, பேருந்து முனையங்கள் மற்றும் பல்வேறு பொதுக் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்காக சிஎம்டிஏ சுமார் ரூ.3,000 கோடியை செலவிட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சி முகமை (CMDA) தன் வரலாற்றிலேயே முதன்முறையாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி, தனது அத்தியாவசியத் தேவைகளைச் சமாளிக்க தமிழக அரசிடம் நிதியுதவி கோரியுள்ளது.