மாதவன் நடிக்க மறுத்த திரைக்கதையில் சூர்யா நடித்து ஹிட்டான திரைப்படம் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2003-ஆம் ஆண்டு வெளியான ‘காக்க காக்க’ திரைப்படம், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான ஒரு அதிரடி த்ரில்லர் திரைப்படமாகும். இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, டேனியல் பாலாஜி மற்றும் ஜீவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ‘காக்க காக்க’ திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளைக் கடந்த போதிலும், இன்னும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக உள்ளது.
