சமீப காலமாக நடிகை திரிஷா குறித்து பல வதந்திகள் பரவி வருகிறது. இதற்கு அவர் நேரடியாக பதிலளிக்காமல் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவு வெளியிட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார். என்னதான் காலம் மாறினாலும் புதிய நடிகைகள் வந்தாலும் திரிஷாவிற்கான மவுசு ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதுதான் அவருக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. 40 வயதை கடந்தும் இவ்வளவு கவர்ச்சியும், மார்க்கெட்டும், ரசிகர் ஆதரவும் வைத்திருப்பது மிகவும் அரிதான விஷயமாகும்.