பள்ளி வேலைநாட்களில் மாணவர்களுக்கு இடையூறு செய்வதை ஏற்க முடியாது என்றும், தவறு செய்த நிர்வாகி மீது த.வெ.க தலைமை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசுப் பள்ளி வகுப்பறைக்குள், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) நிர்வாகிகள் சிலர், அக்கட்சியின் தலைவர் விஜய்யின் புகைப்படத்தை மாட்டி ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்தச் சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறைக்குள் அத்துமீறி நுழைந்து இத்தகைய செயலில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகிகளைக் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், த.வெ.க நிர்வாகிகள் யாரும் பள்ளிகளில் ரீல்ஸ் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.