த.வெ.க. மேஜிக் நம்பரான 118-ஐ எட்டியுள்ளது. வி.சி.க. ஆதரவு அளித்ததை தொடர்ந்து த.வெ.க. தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த முழுமையான தகவல்களைத் தெரிந்துக் கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 என்ற மேஜிக் நம்பரை பெறுவதற்காக தமிழக வெற்றிக்கழகம் மேற்கொண்ட முயற்சி கை கொடுத்துள்ளது. கடந்த புதன்கிழமை காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெற்ற த.வெ.க. கடந்த இரு தினங்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக முயற்சிகள் மேற்கொண்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை இடது சாரிகள் ஆதரவை அளித்ததை தொடர்ந்து வி.சி.க.வும் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ட்விஸ்டாக இன்று காலை த.வெ.க.வுக்கு ஆதரவளிப்பது குறித்து அறிவிக்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். இதனால் தமிழ்நாடு முழுவதும் திருமாவளவனின் முடிவிற்காக காத்திருந்த நிலை ஏற்பட்டது.
இறுதியாக, திருமாவளவனை சந்தித்த த.வெ.க. நிர்வாகி ஆதவ் ஆதவ் அர்ஜூனாவிடம் நிபந்தனையற்ற ஆதரவு கடிதத்தை இன்று மாலை திருமாவளவன் வழங்கினார். இதனால் த.வெ.க. மேஜிக் நம்பரான 118-ஐ எட்டியுள்ளது. வி.சி.க. ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து த.வெ.க. தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 4-வது முறையாக ஆளுநரை சந்திக்க த.வெ.க. தலைவர் விஜய் நேரம் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கும்பட்சத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க உள்ளது.