சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்துவரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 5 முதல் 20 வரை சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கத்தில் தெற்கு ரயில்வே தற்காலிக மாற்றங்களைச் செய்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கையாளுதல், கூடுதல் ரயில்களை இயக்குதல் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டக் கட்டுப்பாட்டில் உள்ள எழும்பூர் ரயில் நிலையத்தில் பணிகள் தொடர்வதால், ஆகஸ்ட் 5 முதல் 20 வரை சில எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, எழும்பூர் ரயில் நிலையத்திற்குப் பதிலாகத் தாம்பரம், மாம்பலம் நிலையங்களிலிருந்து சில ரயில்கள் தற்காலிகமாகப் புறப்படும் மற்றும் அங்கு வரை மட்டுமே இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. தாம்பரம்/மாம்பலம் வரை மட்டுமே இயங்கும் ரயில்கள் (Short Termination)
சென்னை எழும்பூர் வரை செல்லாமல், குறிப்பிட்ட ரயில் நிலையங்களோடு தற்காலிகமாக நிறுத்தப்படும்.
