தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கார் அல்லது பைக் ஓட்டினால், அவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என மாநில காவல்துறை எச்சரித்துள்ளது.

சாலை விபத்துகளைத் தடுக்கும் பொருட்டும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் 18 வயது நிறைவடையாத சிறார்கள் எக்காரணத்தைக் கொண்டும் வாகனங்களை இயக்கக் கூடாது என்றும், விதியை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும் தமிழ்நாடு காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.