பிச்சைக்காரன் 2 படத்தை தானே இயக்கி தயாரித்து ஹீரோவாக நடித்து வெற்றி கண்ட விஜய் ஆண்டனி தற்போது மீண்டும் இயக்குனர் சசியுடன் நூறுசாமி என்ற படத்தில் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகனாக மாறியுள்ளவர் விஜய் ஆண்டனி. 2005-ம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாக இவர், அடுத்து, 2012-ம் ஆண்டு வெளியான நான் என்ற படத்தின் மூலம் ஹீரோ மற்றும் தாயரிப்பாளராக அறிமுகமானார். அதன்பிறகு சலீம், இந்தியா – பாகிஸ்தான் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.