
சிங்கப்பூர்: பேஸ்புக் தளத்தில் நடக்கும் ஆள்மாறாட்ட மோசடிகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தவறினால் சிங்கப்பூர் மதிப்பில் ஒரு பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் பேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனத்துக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
இணைய உலகம் எந்தளவிற்கு வளர்ச்சி அடைகிறதோ அந்தளவிற்கு இணைய குற்றங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒருவரின் அடையாளங்களை அல்லது புகைப்படங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவது அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. சில சமூக வலைதளங்கள் வாயிலாக தொடரும் இவ்வகை மோசடியை அந்தந்த வலைதள நிறுவனங்களும் தடுக்க முயற்சிக்கின்றன.
உத்தரவு
அந்த வகையில் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் சமூக வலைதளத்தில் போலியாக அக்கவுண்ட் உருவாக்கி, அதனை வைத்து ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபடுவதும் தொடர்கிறது. இதனை தடுக்கும் விதமாக சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் பெயர்களில் போலி கணக்குகள், விளம்பரங்கள், பக்கங்கள் போன்ற மோசடிகளை கட்டுப்படுத்த மெட்டா நிறுவனத்துக்கு சிங்கப்பூர் அரசு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது.
