Screenshot
Screenshot

கோவை மாவட்டம் வால்பாறையில் வனவிலங்கு மனிதமோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்நிலையில் இன்று மாலை வால்பாறை வேவர்லி டீ எஸ்டேட்டில் பணிபுரிந்து வரும் வட இந்திய தொழிலாளியின் மகன் ஏழு வயது உள்ள சிறுவன் சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தான் இது குறித்து வால்பாறை வனத்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

வால்பாறையில் மீண்டும் சோகம் : 8 வயது வடமாநில சிறுவனை கொன்ற சிறுத்தை – அச்சத்தில் பரிதவிக்கும் மக்கள் !!!

கோவை மாவட்டம், வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட்டில் கடந்த ஜூலை மாதம் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியை சிறுத்தை கவி சென்று கொன்றது. சிறுமியின் தாய் கண் முன்னே இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில் நீண்ட தேடுதலுக்கு பிறகு புதருக்குள் இருந்து சிறுமியின் உடல் எடுக்கப்பட்டது.

தொடர்ந்து வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை அகப்பட்டது. அதனை வனத் துறையினர் டாப்சிலிப் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

அந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் ஒரு துயரம் அரங்கேறி உள்ளது.

வால்பாறை வாட்டர் பால்ஸ் அருகே உள்ள வெவ்ர்லி பகுதியில் தங்கி பணி புரிந்து வரும் வடமாநில தொழிலாளர்களின் 8 வயது மகன் நூர் இஸ்லாம் 8 வயது மகன் இன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தான்.

அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று சிறுவனை கவ்விக் கொண்டு சென்றது. இதனை அறிந்த கதறிய சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வனத் துறையினர் சிறுவனை தேடினர். அப்பொழுது வீட்டின் அருகே உள்ள புதருக்குள் சிறுவன் சடலமாக கிடந்தான். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வால்பாறையில் அடுத்தடுத்து நடைபெறும் சிறுத்தை தாக்குதல்களால் அங்கு வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சிறுத்தை தாக்குதல்களில் இது நான்காவது உயிரிழப்பு. இந்தச் சம்பவங்களால் வால்பாறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்கள் இடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.