கோவை, பொன்னையா ராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் நகை பட்டறை தொழில் செய்து வருகிறார்.
இவரது மகன் அர்ஜுன் (வயது 18 ). இவர் வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பம் செய்து இருந்தார்.

இதற்காக அவருக்கு உறவுமுறை (ரிலேஷன்ஷிப் சர்டிபிகேட்) சான்றிதழ் தேவைப்பட்டது.

அப்போது அர்ஜுனனின் தந்தையின் நண்பரான இடையர்பாளையம் மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவர் உறவு சான்றிதழ் பெற்று தர உதவி செய்வதாக கூறி உள்ளார்.

இதைத் தொடர்ந்து உறவு சான்றிதழ் வாங்கி கொடுப்பதற்கு ஒரு 10 ஆயிரம் பணத்தை அர்ஜுன் வெள்ளியங்கிரியிடம் கொடுத்து உள்ளார்.

அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அந்த சான்றிதழை அர்ஜுனிடம் வெள்ளியங்கிரி கொடுத்து உள்ளார்.

அதை வைத்து அர்ஜுன் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் அணுகி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி தமிழ்நாடு மருத்துவ தேர்வு குழு அவரது விண்ணப்பத்தை நிராகரிப்பு செய்தது.

Leave a Reply