
நெல்லை நாங்குநேரியைச் சேர்ந்த டேவிட் என்பவரின் மகன் பாலமுருகன். இவரின் தந்தை மலுமிச்சம்பட்டி அருகே குதிரை பண்ணையில் வேலை செய்து வருவதால், இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். பாலமுருகன் கொலை, திருட்டு வழக்கில் கைதாகி நெல்லை சிறையில் இருந்து உள்ளார்.
அப்பொழுது பாளையங்கோட்டை முருகப்பெருமாள் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலமுருகனுக்கு போன் செய்த முருகப்பெருமாள் தனக்கு தனது நண்பர் ஜெயராமனுக்கு கோவையில் வேலை வாங்கி தருமாறு கூறி உள்ளார். அதனால் பாலமுருகன் அவரை மலுமிச்சம்பட்டிக்கு கிளம்பி வரச் சொல்லி இருக்கிறார். இதை அடுத்து நெல்லையில் இருந்து இரண்டு பேரும் வந்து உள்ளனர்.
