கோவை மாவட்டம் வால்பாறையில் தற்பொழுது நகர்மன்ற தலைவராக இருக்கும் அழகு சுந்தர வள்ளி (தி.மு.க) மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர 13 தி.மு.க கவுன்சிலர்கள் மற்றும் ஒரு அ.தி.மு.க கவுன்சிலர்கள் மனு அளித்து இருந்தனர் அதன்படி அதற்கான கூட்டமும் ரகசிய வாக்கெடுப்பும் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற இருந்த நிலையில் நகராட்சி கூட்ட அரங்கில் வாக்கு பெட்டியுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நகராட்சி ஆணையாளர் கணேசன் அமர்ந்து இருந்தார்.

இந்நிலையில் இந்த ரகசிய வாக்கெடுப்பில் 21 வது வார்டு கவுன்சிலர் உமா மகேஸ்வரி மட்டும் கலந்து கொண்ட நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்திய 14 கவுன்சிலர்களும் செல்போனுடன் செல்ல அனுமதிக்க வேண்டி கோஷம் எழுப்பிய நிலையில் நுழைவாயிலில் அனுமதி மறுக்கப்பட்டது.

Leave a Reply