பழனி கோயில் நில மோசடி வழக்கில் விசாரணைக்கு ஜஸ்டின் மணிகண்டன் ஒத்துழைக்கவில்லை என கூறி அவரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக இன்று ஆகஸ்ட் 6-ந் தேதி கைது செய்துள்ளனர்.

பழனி கோயில் நில மோசடி வழக்கில் விசாரணைக்கு ஜஸ்டின் மணிகண்டன் ஒத்துழைக்கவில்லை என கூறி அவரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக இன்று ஆகஸ்ட் 6-ந் தேதி கைது செய்துள்ளனர்.

பழநி அடிவாரத்தில் பூங்கா சாலையில் உள்ள தண்பாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் பழநி தேவஸ்தானத்துடன் இணைத்து நீதிமன்றங்களால் உத்தரவிடப்பட்டன. இதையடுத்து, பல ஆண்டுகளாக ஆக்கிர மிப்பில் இருந்த நிலத்தை மீட்டு, பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இலவச வாகன நிறுத்தம் அமைத்து, பயன்பாட்டில் உள்ளது. ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை ரூ.2 கோடிக்கு மோசடியாக பதிவு செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது.

கடந்த ஜூலை 6-ம் தேதி பொறுப்பு வகித்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சட்டவிரோதமாக தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். இதையடுத்து, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் அண்ட் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய உடுமலைப்பேட்டை அடுத்த பாப்பான்குளத்தை சேர்ந்த வெள்ளைத்துரை, பழநி டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.