“காவிரி ஆற்றில் பரவலாக வளர்ந்துள்ள நாணல் செடிகளை அப்புறப்படுத்தி நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்ய வேண்டும். காவிரியில் கழிவு நீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கோரிக்கை விடுத்தார்.

திருச்சி உதவி ஆட்சியர்  அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு  கலந்து கொண்டு உதவி மாவட்ட ஆட்சியர் சாலை தவளவனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார்.