சட்டமன்றக் கூட்டம் முடிந்து வெளியே வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவறுதலாக உதயநிதி ஸ்டாலினின் காரில் ஏறச் சென்று பின்னர் சுதாரித்துத் தனது காரில் ஏறிய சுவாரசிய சம்பவம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் வெளிவந்த நிலையில், தலைமைச் செயலக வளாகத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய சுவாரசியமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சட்டப்பேரவை நிகழ்வுகள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துவிட்டு, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் புறப்படுவதற்காக வெளியே வந்தார். அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரை நோக்கிச் சென்று அதில் ஏற முயன்றார்.