இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படும் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, துஷாரா விஜயன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள நடிகர் மாதவன், ஒரு படத்தில் நான் வரும் கட்சிகள் வெறும் 9 நிமிடங்கள் தான். ஆனால் 20 ஆண்டுகளாக அந்த படத்தை பற்றியும், என் கேரக்டர் பற்றியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். 

2000-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் மாதவன். சாக்லேட் பாய் கேரக்டதில் நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்து என்னவளே, மின்னலே டும் டும் டும் பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட படங்களில் நடித்த மாதவனுக்கு ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தை கொடுத்த படம் ரன்.

லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ரன் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு அன்பே சிவம், பிரியமான தோழி, ஆயுத எழுத்து, என பல வெற்றிப்படங்களில் நடித்திருந்த மாதவன் கடைசியாக டெஸ்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில், கடந்த ஆண்டு வெளியானது. ராக்கெட்ரி படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமான மாதவன் தற்போது ஜி.டி.என்.என்ற படத்தில் நடித்துள்ளார்.