பெண்களை ஆன்லைனில் அவமதிக்கும் அல்லது ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான ஆபாசப் புகைப்படங்களை பரப்பும் சமூக வலைதள கணக்குகளை பொதுமக்கள் அடையாளம் காட்டி தெரிவிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது புகைப்படங்களை பயன்படுத்தி ஏ.ஐ. மூலம் டீப் ஃபேக் (Deepfake) பதிவுகளை உருவாக்குபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த சில மணி நேரங்களிலேயே, நடிகை மிருணாள் தாக்கூர் மேலும் ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

பெண்களை ஆன்லைனில் அவமதிக்கும் அல்லது ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான ஆபாசப் புகைப்படங்களை பரப்பும் சமூக வலைதள கணக்குகளை பொதுமக்கள் அடையாளம் காட்டி தெரிவிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பதிவில், “எந்த விளைவுகளும் ஏற்படாது என்று நினைத்துக் கொண்டு கீபோர்டின் பின்னால் மறைந்து செயல்படும் நபர்களுக்கு ஒரு ‘ஸ்டாண்டிங் ஓவேஷன்'” என்று மிருணாள் தாக்கூர் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து தனது எக்ஸ் (X) கணக்கின் இணைப்பையும் பகிர்ந்து, “பெண்களை துன்புறுத்தும், ஏ.ஐ மூலம் அல்லது அவர்களின் சம்மதமின்றி தனிப்பட்ட புகைப்படங்களை பகிரும் கணக்குகளை கண்டால் இங்கே டேக் செய்யுங்கள்” என்று ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். இதையே அவர் எக்ஸ் தளத்திலும் மீண்டும் வலியுறுத்தினார். “இணையத்தின் ‘மகான்களுக்கு’ ஒரு ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) உருவாக்கலாம். யாரையும் துன்புறுத்தும் அல்லது ஏ.ஐ மூலம், அல்லது அனுமதியின்றி தனிப்பட்ட புகைப்படங்களை பரப்பும் கணக்குகளை கீழே டேக் செய்யுங்கள். ஆதாரங்களை சேகரித்து வைத்திருப்பது மிகவும் முக்கியம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

mrunal-thakur-insta-story-2026-08-04-16-28-14