தனுஷ், எல்.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரை தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில்தான் படித்தார். பின்னர் மேல்நிலைப் படிப்பை வேறு பள்ளியில் முடித்தார்.

நடிகர் தனுஷ், தான் படித்த சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் இருந்த பழைய கட்டடத்திற்குப் பதிலாக, புதிய மூன்று மாடி கல்விக் கட்டடத்தை கட்டித் தருவதற்கான முழு செலவையும் அவர் ஏற்றுள்ளார்.

‘தனுஷ் பிளாக்’ (Dhanush Block) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கட்டடம், செவ்வாய்க்கிழமை நடிகர் தனுஷ், அவரது முன்னாள் வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினரின் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. தனுஷ், எல்.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில்தான் படித்தார். பின்னர் மேல்நிலைப் படிப்பை வேறு பள்ளியில் முடித்தார்.

இந்த விழாவில் மிகவும் கவனம் ஈர்த்த தருணங்களில் ஒன்று, தனுஷ் தனது முன்னாள் ஆசிரியர்களின் காலில் விழுந்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்ற சம்பவமாகும். மேலும், அவர்களுடன் மனம்விட்டு உரையாடிய அவர், நினைவாக புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். இதனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்தச் சந்திப்பு மிகவும் உணர்வுபூர்வமானதாக அமைந்தது. இந்த திறப்பு விழாவில், ஒளிப்பதிவாளரும் தனுஷின் நீண்டகால நண்பரும் பள்ளித் தோழருமான குமரன் கலந்து கொண்டார்.