திமுக ஆட்சி இருந்திருந்தல் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதல்மைச்சரால் தமிழ்நாட்டிற்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்ற நேற்று (ஆகஸ்ட் 3) தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஏற்று பேசிய எதிர்க்கட்சி உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய் மற்றும் த.வெ.க அரசு குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அவரின் பேச்சுக்கு எதிப்பு தெரிவித்து த.வெ.க சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபேற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், குறுவை பாதிக்கப்பட்டதற்கு டம்மி முதலமைச்சர் தான் காரணம். விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் விஜய் இதுபற்றி வாய்திறந்து பேசவில்லை. ஆடி 18-ம் நாள் இன்று, ஆடிப்பெருக்கில் ஆறு முழுவதும் தண்ணீர் வழிந்து ஓடும். ஆனால், இப்போது டெல்டா நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. “திமுக ஆட்சி இருந்திருந்தல் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதல்மைச்சரால் தமிழ்நாட்டிற்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆட்சி அமைத்து 3 மாதங்கள் ஆகியும் பா.ஜ.க என்ற சொல்லைக் கூட உச்சரிக்காத தைரியசாலி நமது முதல்மைச்சர் விஜய். கர்நாடகாவில் உள்ள காங்கிரஸை எதிர்த்துப் பேச முதலமைச்சருக்கு திராணி இல்லை. விவசாயிகள் கண்ணீர் வடிக்கக்கூடிய நிலையில் அமைச்சர்கள் சினிமாவிற்கு சென்று கண்ணீர் வடிக்கிறார்கள். பிரச்னையை திசை திருப்ப, தினமும் ஏதாவது ஒரு ரீல்ஸ் போடுகிறார் முதலமைச்சர் விஜய்.
