கோவை நீதிமன்ற வளாகம் அருகில் அமைந்துள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழக (TEXCO) அலுவலகத்தில் அமைச்சர் சரத்குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

கோவையில் உள்ள முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், அங்கு தீவிர ஆய்வு மேற்கொண்டதுடன் பயனாளிகளுக்குப் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிச் சிறப்பித்தார்.
கோவை நீதிமன்ற வளாகம் அருகில் அமைந்துள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழக (TEXCO) அலுவலகத்தில் அமைச்சர் சரத்குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, இந்த அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
மேலும், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற தேவைகள் என்னென்ன என்பது குறித்து அங்குள்ள அலுவலர்களுடன் விரிவாகக் கலந்தாய்வு மேற்கொண்டார்.
ரூ. 61.90 லட்சம் கொடிநாள் நிதி காசோலை ஒப்படைப்பு
இந்த நிகழ்வின் போது ஒரு முக்கிய நிகழ்வாக, கோவை மாநகராட்சி சார்பில் 2025-ஆம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட கொடிநாள் நிதியான மொத்தம் ரூ.61,90,000-க்கான காசோலையை கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டாரவி தேஜா, அமைச்சர் சரத்குமாரிடம் நேரில் வழங்கினார்.
அமைச்சர் சரத்குமாரிடம் நேரில் வழங்கினார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/07/31/whatsapp-image-2026-2026-07-31-15-40-52.jpeg)
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/07/31/whatsapp-image-2026-2026-07-31-15-41-14.jpeg)
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 14 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ.5,60,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சரத்குமார் வழங்கி வாழ்த்தினார்.
நாட்டின் பாதுகாப்பிற்காகச் சேவையாற்றிய முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலனைக் காப்பதில் அரசு எப்போதும் முன்னுரிமை அளித்துச் செயல்படும் என இந்நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. இதில் அரசுத் துறை உயர் அலுவலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
