அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட முழு விபரம் இங்கே…

திண்டுக்கல்லில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியியல் கல்லூரியின் அறிவியல் மற்றும் மனிதவளத் துறையில் திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 06.07.2026

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.Sc in Chemistry/ Organic Chemistry/ Inorganic Chemistry/ Physical Chemistry படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 25,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/pdf/CMRG251286_Recruitment_PA_DGL.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Dr. K. Sekar, Assistant Professor (Sr. Gr), Department of Science and Humanities, Anna University, University College of Engineering, Dindigul – 624622

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.07.2026

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.