ஒரு திரைப்படத்தின் இயக்குநர், சம்பள பாக்கி தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடியிருப்பது தமிழ் திரைப்படத் துறையில் முக்கிய விவகாரமாக பார்க்கப்படுகிறது.

இயக்குநர் சுதா கொங்கரா, தாம் இயக்கிய ‘பராசக்தி’ திரைப்படத்திற்கான ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் ரூ.8.39 கோடி நிலுவையில் இருப்பதாகக் கூறி, தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தற்போது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தை இயக்குவதற்காக மொத்தம் ரூ.15 கோடி ஊதியம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ரூ.8.39 கோடி தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.