அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு பெற்ற மற்றொரு குற்றத்திற்காகவும் தனியாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் சுப்பையன், லஞ்சம் பெற்றது நிரூபிக்கப்பட்ட வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் சுமார் 18 ஆண்டுகள் நீண்ட விசாரணைக்குப் பிறகு இந்த முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் சட்டத்தின் முன் தப்ப முடியாது என்பதை இந்த தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக சட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.