தற்போதைய முதல்வர் விஜய் நடிப்பில் வெளியானக நண்பன், பீஸ்ட், லியோ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழக அரசு, திரைத்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறது. இதற்கு முன்பு, சிறப்பு காட்சிகள் திரையிட அரசிடம் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் த.வெ.க ஆட்சி அமைந்தவுடன், புதிய திரைப்படங்கள், வெளியான ஒரு வாரத்திற்கு அனுமதி இல்லாமல் சிறப்பு காட்சிகள் திரையிடலாம், பண்டிகை காலங்களிலும் அரசின் அனுமதி பெற தேவையில்லை என்று சலுவை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், விஜய் முதல்வர் ஆனவுடன், சினிமா தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் சங்க உறுப்பினர்கள் தனித்தனியாக அவரை சந்தித்து தங்கள் துறை சார்பான கோரிக்கைளை வைத்திருந்தனர். இந்த கோரிக்கைளை பெற்றுக்கொண்ட விஜய், அதிகாரிகளிடம பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியானது. இதனிடையே, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
