பாக்யலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், அரசியலுக்கு வருவதற்கு ஊழல் செய்திருக்கணுமா? ரௌடியாக இருக்கணுமா? சாராயம் காச்சியிருக்கணுமா? தவறு செய்திருக்கணுமா? அதுதானா தகுதியா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், பிரபல சின்னத்திரை நடிகர் சதீஷ் (பாக்கியலட்சுமி சீரியல் கோபி) வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அரசியலுக்கான தகுதி குறித்து பேசிய சதீஷ், அரசியலுக்கு வருவதற்கு ஊழல் செய்திருக்க வேண்டுமா? ரவுடியாக இருக்க வேண்டுமா? அல்லது தவறு செய்து இருக்க வேண்டுமா? என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ஜாதி, மதம் கடந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருப்பதே ஒரு தலைவருக்கான உண்மையான தகுதி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
