வி.சி.க போட்டியிடாத தொகுதிகளில் ஒரு சில இடங்களில் கூட்டணிக்கு கட்சியினர் ஒத்துழைக்கவில்லை என்றும், தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை என்றும் கூறி திருமாவளவன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், “நம்முடைய கட்சியின் சார்பில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், தேர்தல் பணிக்குழு நியமனம் செய்யப்பட்டு, ஆங்காங்கே தோழர்கள் தொகுதி வாரியாக கட்டுக்கோப்பாக இருந்து பணியாற்றி இருக்கிறார்கள். ஒரு சில தொகுதிகளை தவிர. தேர்தல் பணியாற்றியதில் ஒரு சில தொகுதிகளில் இருந்து தோழர்கள் ஒற்றுமையாக இருந்து பணியாற்றவில்லை என்ற தகவல்கள் தெரியவந்துள்ளன. அது குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.