தமிழகத்தில் கோடை வெயிலால் ஐஸ்கிரீம் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், கலப்படத்தைத் தடுக்க உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி விதிகளை அமல்படுத்தி உள்ளது. தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களின் விற்பனை பெருமளவு உயர்ந்துள்ளது. இதனைப் பயன்படுத்தி தரம் குறைந்த மற்றும் கலப்படப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள், உணவுப் பாதுகாப்புத் துறையின் விதிகளை முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க மாவட்ட அதிகாரிகளுக்குத் தீவிர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு வழிவகை செய்கிறது.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் சோதனையில் முக்கியமாக ஆய்வு செய்யப்பட உள்ளன. ஐஸ்கிரீம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் தூய்மை, தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி (Expiry Date) சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பது நிறுவனத்தின் உணவுப் பாதுகாப்பு உரிம எண் (FSSAI Number) உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
