கொடைக்கானல் நட்சத்திர ஏரி சுற்றுச்சாலையில் ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் ஆர்வத்துடன் அவருடன் செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஒரு மாத காலத்திற்கும் மேலாகத் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது ஓய்வெடுப்பதற்காக ‘மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்குத் தனது குடும்பத்தினருடன் வருகை தந்துள்ளார்.