மே 1 முதல் வட தமிழகத்தில் கடும் வெயிலும், பிற மாவட்டங்களில் மிதமான முதல் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் மற்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வெப்பத்தின் அளவு உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், காலை முதல் மாலை வரை பொதுமக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு அனல் காற்று வீசி வருகிறது. தினசரி வெப்பநிலை சராசரியாக 95 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகி வரும் சூழலில், மே மாதத்தில் வெயில் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.