வி.டி.வி கணேஷ், தான் டி.வி.கே.வுக்கு தான் வாக்களித்தேன். விஜய் தான் சமூகத்தின் மாற்றத்திற்கு சரியாக ஆள். த.வெ.க நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.

தமழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி 2026 சட்டசபை தேர்தலை சந்தித்த விஜய், கட்சி தொடங்கியது முதலே பல சிக்கல்களை சந்தித்திருந்தாலும் வாக்குப்பதிவு நாளில் அவருக்கான ஆதருவு அதிகமாக இருந்த நிலையில், தற்போது சீரியல் நடிகை ஃபரீனா ஆசாத் விஜய்க்கு ஆதரவாக வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஒரு மாதம காலமாக நடைபெற்று வந்த தமிழக சட்டசபை தேர்தல் திருவிழா நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சுந்திரம் பெற்றது முதல் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, 85 சதவீத வாக்குகள் பதிவாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் இளைஞர்கள் பலரும் அதிகளவில் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
இந்த தேர்தலில் புதுமுகமாக களமிறங்கி பிரச்சாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய நடிகர் விஜய், தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதில் இருந்து காக்கி பேண்ட், வெள்ளை சட்டை அணிந்துகொண்டு தான் பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரின் ட்ரெஸ் கோட் இணையத்தில் அதிகமாக ட்ரெண்ட் ஆன நிலையில், வாக்களிக்க செல்லும்போது த.வெ.க தொண்டர்கள் இதேபோன்று ட்ரெஸ் கோட்டில் செல்ல வேண்டும் என்று கேட்க்கொண்டிருந்தார்.
அவரின் பேச்சை கேட்டுக்கொண்ட த.வெ.க தொண்டர்கள் பலரும் காக்கி பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து, தேர்தலில் வாக்களித்தனர். குறிப்பாக சினிமா துறையில், நடிகர் சிபிராஜ் நடிகர் விக்ரம், சிம்பு, ஜெய், இயக்குனர் பா.ரஞ்சித், மூத்த நடிகர் விஜயகுமார் உள்ளிட்ட பலரும் விஜயின் ஸ்டைலில் வந்து வாக்களித்தார். இதில் வாக்களித்து விட்டு வெளியில் வந்த நடிகரும் தயாரிப்பாளருமான வி.டி.வி கணேஷ், தான் டி.வி.கே.வுக்கு தான் வாக்களித்தேன். விஜய் தான் சமூகத்தின் மாற்றத்திற்கு சரியாக ஆள். த.வெ.க நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.
அந்த வகையில் தற்போது பிரபல சின்னத்திரை நடிகை ஃப்ரீனா ஆசாத், விஜயின் ட்ரெஸ் கோட் அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விமர்சனங்களையும் பெற்றது. ஆனால் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஃபரீனா ஆசாத் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், என்னை டி.ம்.-லும் அன்ஃபாலோ-வும் செய்பவர்களுக்கு… நான் விரும்புகிறதற்கு வாக்களிப்பதால் நான் (தற்குறி) “கல்வியறிவில்லாதவள்” ஆகிவிட மாட்டேன். மற்றவர்களின் தேர்வை விமர்சிப்பதால் நீங்கள் “கல்வியுள்ளவர்” ஆகிவிட மாட்டீர்கள்.
எல்லோரும் பிறந்தபோதே முதல்வர் (CM) அல்ல. ஒருவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை. அரசியல் பாதை என்னவென்று கேட்கிறவர்களுக்கு சொல்றேன். இது புதிய அரசியல், இளைஞர்களின் அரசியல். நீங்கள் புரிந்துகொள்வீர்கள். இனிமே இதுதான் அரசியல் என தரமான பதிலடி கொடுத்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் டிரெண்டாகி பலரும் பரீனாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
