தமிழ் சினிமாவின் நவரச நாயகன் என்று அழைக்கப்படும் கார்த்திக், பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன். பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர், தற்போது நடிப்பில் இருந்து ஒய்வு எடுத்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் ஏராளமான புதுமுக நடிகர்களை நடிகைகளை அறிமுகம் செய்த இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் உருவான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் கார்த்திக் – ராதா என்ற இரு முக்கிய நட்சத்திரங்களை அறிமுகம் செய்து வைத்தார்.