பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான அந்த 7 நாட்கள் திரைப்படம் அம்பிகாவின் திரை வாழ்க்கையில் முக்கியமான ஒரு படம். இந்த படம் தமிழில் அவர் நடித்த 4-வது திரைப்படமாகும்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாணில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை அம்பிகா, தான் அந்த ஏழு நாட்கள் படத்தில் நடிக்கும்போது தான் இப்படி ஒரு பண்டிகையே இருக்கிறது என்று தெரியவந்தது என கூறியுள்ளார்.
பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான அந்த 7 நாட்கள் திரைப்படம் அம்பிகாவின் திரை வாழ்க்கையில் முக்கியமான ஒரு படம். இந்த படம் தமிழில் அவர் நடித்த 4-வது திரைப்படமாகும். திரையுலகில் பல நடிகைகள் வந்து சென்றாலும், சிலருக்கு மட்டுமே ஒரு சில படங்கள் காலத்தால் அழியாத அடையாளத்தை பெற்றுத் தரும். அந்த வகையில், அம்பிகாவுக்கு அந்த ஏழு நாட்கள் திரைப்படம் ரொம்பவே ஸ்பெஷல் தான்.
இது குறித்து சமீபத்தில் சித்ரா லட்சுமணன் அவர்களுடனான நேர்காணலில், பேசிய அம்பிகா, ஒரு சம்பவம் குறித்து கூறினார். இந்த நிகழ்ச்சியில், சித்ரா லட்சுமணன் “உங்களுக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்த படம் ‘அந்த ஏழு நாட்கள்’ தானே?” என்று கேட்டபோது, அம்பிகா அந்த 7 நாட்கள் படமும் கமல்ஹாசனுடன் நடித்த ‘சகலகலா வல்லவன்’ திரைப்படமும் அடுத்தடுத்து வெளிவந்து தனக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்ததாகக் கூறியுள்ளார்.
