நடிகர் சர்வானந்த், தனது சமூக வலைத்தளத்தில் இருந்த அனைத்து திருமண புகைப்படங்களையும் நீக்கி உள்ள சம்பவம் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கௌரி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சர்வானந்த். தொடர்ந்து, 2009-ம் ஆண்டு வெளியான ‘நாளை நமதே’ படத்தின் மூலம் சர்வானந்த் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து, ‘எங்கேயும் எப்போதும்’, ‘கணம்’ போன்ற படங்களில் நடித்தார். இதில், ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படம் சர்வானந்திற்கு தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது.
கடந்த 2023-ஆம் ஆண்டு நடிகர் சர்வானந்த், தனது காதலி ரக்ஷிதா ரெட்டியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினரின் திருமணம் எளிமையான முறையில், குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ஆனால், திருமண வரவேற்பு பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, நாக சைதன்யா உள்ளிட்ட தெலுங்கு திரையுலகினர் கலந்துகொண்டனர்.
