தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்கள் கவனத்திற்கு; அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் டாப் 50 கல்லூரிகளின் பட்டியல் இங்கே!!

வேலை வாய்ப்பு, அதிக சம்பள தொகுப்பு, உயர் கட் ஆஃப் மற்றும் என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை அடிப்படையில் தமிழ்நாட்டின் டாப் 50 பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். இன்ஜினியரிங் படிப்புகளில் 2026 ஆம் ஆண்டில் சேர விரும்பும் மாணவர்களும் பெற்றோர்களும் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதில் அடங்கியுள்ளது.
TNEA 2026: தமிழக டாப் 50 இன்ஜினியரிங் கல்லூரிகள்; பிளேஸ்மெண்டில் இவைதான் கெத்து!
தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்கள் கவனத்திற்கு; அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் டாப் 50 கல்லூரிகளின் பட்டியல் இங்கே
Written byAmbikapathi Karuppaiah
21 Apr 2026 17:02 IST
/indian-express-tamil/media/media_files/2026/04/01/engineering-counciling-2026-04-01-04-37-36.jpg)
வேலை வாய்ப்பு, அதிக சம்பள தொகுப்பு, உயர் கட் ஆஃப் மற்றும் என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை அடிப்படையில் தமிழ்நாட்டின் டாப் 50 பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். இன்ஜினியரிங் படிப்புகளில் 2026 ஆம் ஆண்டில் சேர விரும்பும் மாணவர்களும் பெற்றோர்களும் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதில் அடங்கியுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதுப்புது தொழில்நுட்பங்கள், உயர் சம்பள தொகுப்பு, அதிக வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆர்வம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெறுகிறது. இது 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறுகிறது.
பொறியியல் படிக்க 400க்கும் மேல் கல்லூரிகள் இருந்தாலும், சிறந்த கல்லூரிகள் படிக்கும்போது அதிக சம்பள தொகுப்புள்ள வேலைவாய்ப்பு கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே மாணவர்கள் சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்வது அவசியம். பொறியியல் கல்லூரிகளை பொறுத்தவரை சென்னை மற்றும் கோவை பகுதி கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இருப்பினும் தமிழகம் முழுவதும் பரவலாக சிறந்த கல்லூரிகள் உள்ளன.