இந்த வெற்றிக்குப் பிறகு கீதாலட்சுமி கனா கண்டேன் போன்ற சில திரைப்படங்களிலும், குறிப்பாக விவேக்குடன் இணைந்து சிறிய நகைச்சுவை வேடங்களில் தோன்றினார்.

எம். குமரன் S/O மகாலட்சுமி திரைப்படம் தமிழ் சினிமாவில் காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் மற்றும் ஆக்‌ஷன் ஆகிய அனைத்தையும் சரியான அளவில் கலந்த ஒரு முழுமையான வணிக வெற்றிப்படமாக திகழ்கிறது. ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், நதியா, அசின் ஆகியோரின் வலுவான நடிப்புடன், விவேக் வழங்கிய நகைச்சுவை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எம். ராஜா இயக்கிய இந்தப் படம் வெளியாகிய காலத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அதன் பாடல்கள் மற்றும் உணர்ச்சி காட்சிகளும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனஇந்தப் படத்தில் விவேக்குடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளில் கலக்கியவர் நடிகை கீதாலட்சுமி. குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியின் மகளாக கேரளப் பெண்ணாக நடித்த அவர், தனது சுறுசுறுப்பான உடல்மொழியும், நேர்த்தியான டைமிங்கும் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். மாடியில் இருந்து குதித்து தண்ணீரில் நனைந்து வரும் விவேக்கிடம் “நான் பின்னே காணாம்” என்று அவர் கூறும் காட்சியும், அதற்கு விவேக் அளிக்கும் டபுள் மீனிங் பதிலும் அப்போது திரையரங்குகளில் பெரும் சிரிப்பலை கிளப்பியது. இக்காட்சி இன்று வரை மீம்ஸ்களிலும், சமூக வலைதளங்களிலும் பேசப்படும் அளவுக்கு பிரபலமானதாக உள்ளது..

இந்த வெற்றிக்குப் பிறகு கீதாலட்சுமி கனா கண்டேன் போன்ற சில திரைப்படங்களிலும், குறிப்பாக விவேக்குடன் இணைந்து சிறிய நகைச்சுவை வேடங்களில் தோன்றினார். எனினும், சினிமாவில் பெரிய வாய்ப்புகள் குறைந்ததால், அவர் பின்னர் சீரியல் உலகுக்கு திரும்பினார். சித்தி, அரசி மற்றும் அண்ணாமலை போன்ற பிரபலமான தொடர்களில் நடித்த அவர், குடும்ப கதாபாத்திரங்களில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கனா கண்டேனடி (விஜய் டிவி) மற்றும் இரு மலர்கள் (சன் டிவி) ஆகிய தொடர்களில் அண்ணி கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். சமீபத்தில் வெளியான அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. முன்பு ஒல்லியான தோற்றத்தில் இருந்த அவர் தற்போது சற்றே எடை கூடியிருந்தாலும், முகத்தின் இயல்பான அழகு மற்றும் வெளிப்பாடு எவ்வித மாற்றமும் இல்லாமல் அதேபோல் திகழ்கிறது என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

சினிமாவில் குறுகிய காலமே இருந்தாலும், ஒரு சில காட்சிகளிலேயே ரசிகர்களின் நினைவில் நீங்காத தடம் பதித்த கீதாலட்சுமி, இன்று மீண்டும் தொலைக்காட்சி வழியாக ரசிகர்களை சந்தித்து வருவது அவரின் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. கடந்த கால நகைச்சுவை நினைவுகளுடன், இன்றைய குடும்ப கதாபாத்திரங்களிலும் அவர் தன்னுடைய நடிப்புத் திறனை தொடர்ந்து நிரூபித்து வருவது குறிப்பிடத்தக்கது.