விவாகரத்துக்கு விஜய் சம்மதிப்பாரா? மீண்டும் இருவரும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும நிலையில், விரைவில் அவரது விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இதனிடைஇவர்கள் இருவருக்கும் இடையே திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்கு பின்பும் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து சங்கீதா அளித்த பழைய பேட்டிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். 234 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்த அவர் தற்போது பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று சென்னையில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். வாக்குப்பதிவுக்கு இன்றும் ஒரு வார காலமே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளது.
இதனிடையே அரசியல் கட்சி தொடங்கியது முதல் பல தடைகளை சந்தித்து வரும் விஜய், சமீபத்தில் அவரது மனைவி ஒரு ஷாக் கொடுத்தார். தனது கணவர் விஜய் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக கூறி, அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மனுவில் அவர் குறிப்பிட்டது நடிகை த்ரிஷா தான் என்ற பலரும் கூறி சவந்தனர்.
