கோவையில் லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ பட வெற்றி விழா – மாட்டுவண்டி இழுத்தபடி வந்த கூல் சுரேஷ்; பேட்டியின் போது செருப்பை கழட்டி அடிப்பேன் என வாட்டர்மெலன் திவாகருக்கு பகிரங்க மிரட்டல்.

லெஜண்ட் சரவணன் நடித்த லீடர் படம் தமிழகம் முழுவதும் திரையரங்குளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் லீடர் படம் வெளியாகி பத்தாவது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் கோவை நூறடி சாலையில் உள்ள கற்பகம் சினி காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதில் அகில இந்திய லெஜண்ட் சரவணன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கூல் சுரேஷ், “நல்ல படங்களுக்கு ரசிகர்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள். ‘லீடர்’ படம் அதற்கு ஒரு உதாரணம். இப்படம் மேலும் பெரிய வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து அண்மையில் இணையதளத்தில் ஜனநாயகன் படம் வெளியாக காரணமாக இருந்தவர்களை தேடி கண்டு பிடித்து தூக்கில் இட வேண்டும் என ஆவேசமாக கூறினார்.
