எந்த நாட்டில் நீங்கள் குடியேறினாள் வேலை – வாழ்க்கை சமநிலையாக இருக்கும் என்றும் உங்கள் வீட்டு செலவு குறைவாக இருக்கும் என்ற பட்டியல் வெளியாகி உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

சிறந்த வானிலை, முறையான வேலை – வாழ்க்கை சமநிலை (Work-life balance) மற்றும் புதிய அனுபவங்களைத் தேடி, அதிக அளவிலான பிரிட்டன் மக்கள் தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறி பிற நாடுகளில் குடியேற விரும்புகின்றனர். சிறந்த மருத்துவ வசதிகளைக் கொண்ட ஐரோப்பிய நாடுகள் முதல் பல தூரத்து நாடுகள் வரை பல வாய்ப்புகள் இருப்பதால், எந்த நாட்டிற்குச் செல்வது என்பதை முடிவு செய்வது எளிதான விஷயம் அல்ல.