தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) தனது நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

சென்னைமீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மற்றும் வி.சி.க தலைவர் திருமாவளவன் இடையே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையின் முடிவில், த.வெ.க ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்கும் அதிகாரப்பூர்வ கடிதத்தை திருமாவளவன் வழங்கினார்.