தமிழ்நாட்டில் கோடை வெயில் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், உள் தமிழக மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே கோடை வெயில் சதமடித்து வரும் நிலையில், உள் தமிழக மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வேலூரில் அதிகபட்சமாக 105.26 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ள சூழலில், நிலவும் அதிக ஈரப்பதம் காரணமாக பொதுமக்கள் கடும் அசௌகரியங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.