ஜோதிபாசு என்ற விவசாயி, டான்பெட் நிறுவனத்திடம் உரக் கொள்முதல், டெண்டர் நடைமுறைகள், சப்ளையர்களின் விவரங்கள் மற்றும் தரப் பரிசோதனை குறித்த 11 வகையான தகவல்களை ஆர்.டி.ஐ. மூலம் கோரியிருந்தார்.

தமிழகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரம் மற்றும் இடுபொருட்களை விநியோகிப்பதில் முக்கியப் பங்காற்றும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TANFED), இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வரும் ஒரு ‘பொது அதிகாரம்’ (Public Authority) கொண்ட அமைப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.