சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை என்ன? விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இங்கே!!

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ஐ.ஐ.டி – IIT Madras) தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகத்தில் இளநிலை நிர்வாகி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 14.08.2026 ஆகும். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Junior Executive
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 0 – 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 18,000 – 30,000 (தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வழங்கப்படும்)
