சென்னையில் சக மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சட்ட கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயதான காளீஸ்வரன் என்பவர் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், தனது ஆபாசமான, மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவுவதை கண்டறிந்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதையடுத்து, பல்லாவரம் போலீசார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, சைபர் குற்றப் பிரிவின் உதவியுடன் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.