27 வருஷத்தில் 57 வருஷத்துக்கு தேவைப்பட்ட வேலை பண்ணிருக்கிறேன். ராவும் பகலுமா பாடி இந்த வாய்ச் என்னன்னா செய்யக்கூடாது அதெல்லாம் பண்ணி கத்தி, டப்பிங் பண்ணி பண்ணிருக்கேன்.

பொதுவாக சினிமாவில் பாடல் பாடும் பாடகர்கள் ஐஸ்கிரீம், குளிர்ந்த தண்ணீர் சாப்பிட கூடாது என்று சொல்வார்கள். ஆனால் நான் அதை ரெகுலராக சாப்பிடுவேன் என்று கூறியுள்ள பாடும் நிலா எஸ்.பி.பி அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். 

பழைய வீடியோ ஒன்றில், அவரின் உதவியாளரிடம், பிஸ்தா கிடைக்குமா? பெரிய பிஸ்தா போய் கொண்டு வா போ போ என்று எஸ்.பி.பி சொல்ல, மற்றொருவர் அவரிடம், பாலு சர் ஏன் ஐஸ்க்ரிம் கேட்கிறீங்க தொண்டை கட்டிவிட போகிறது என்று சொல்ல, அதற்கு எஸ்.பி.பி, ஐஸ்க்ரீம் சாப்பிடாமல் இருந்து, எப்போதாவது சாப்பிட்டால் தொண்டை நிஜமாகவே கட்டுவிடும். அதேபோல், ஐஸ் வாட்டர் சாப்பிடாமல் இருந்து திடீரென ஒருநாள் சாப்பிட்டால் தொண்டை கட்டுவிடும்.

தொழில் ரொம்ப முக்கியம் தான். இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக இதெல்லாம் விட்டுவிட முடியுமா? ஐஸ்க்ரீம் எனக்கு உயிர் ஐஸ் வாட்டர் எல்லாமே வாழவே முடியாது. ஆனால் வாய்ஸ் சில நேரம் இதற்காக மட்டுமே போகாது. ரொம்ப ஓவர் யூஸ் பண்ணாலும் போய்விடும். கொஞ்சம் மூளை நமக்கு கம்மி சார். ஏன்னா இந்த 27 வருஷத்தில் 57 வருஷத்துக்கு தேவைப்பட்ட வேலை பண்ணிருக்கிறேன். ராவும் பகலுமா பாடி இந்த வாய்ச் என்னன்னா செய்யக்கூடாது அதெல்லாம் பண்ணி கத்தி, டப்பிங் பண்ணி பண்ணிருக்கேன்.