கோவை :
கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம்…
லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
கோவை, கோனியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக இன்று நடைபெற்றது.
லட்சக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டு கோனியம்மனை வழிபட்டு மகிழ்ந்தனர், கோவையின் காவல் தெய்வம் கோனியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 18ஆம் தேதி துவங்கியது அன்று முதல் இன்று வரை தினசரி பெண்கள் கொடிக்கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபட்டு வந்தனர் திருவிழா நாட்களில் அம்மன் புலி வாகனம் கிளி வாகனம் , சிம்ம வாகனம், அன்ன வாகனம் ,காமதேனு வாகனம், வெள்ளை யானை வாகனம், திருவீதி உலா இதுவரை நடைபெற்று வந்தது, அம்மன் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் இதனை தொடர்ந்து இன்று காலை அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது, முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்றது
தேரோட்டத்தினை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கௌமார மடாலய ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதீனம் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர்
கோவை ராஜவீதி தேர் நிலை திடலில் இருந்து புறப்பட்ட தேர் ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, கருப்ப கவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் தேர் நிலை திடலுக்கு வந்தடைந்தது. பேரிடத்தில் ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டினர் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் மோர் உணவு உள்பட அனைத்தும் சிறப்பாக பக்தர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதனால் பொதுமக்கள் எந்த சிரமமும் இன்றி தேரோட்டத்தில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்