79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை மாநகர காவல் துறை சார்பில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி, கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் காலை நேரத்தில் தொடங்கியது.
ஒத்திகையில், காவல்துறை, போக்குவரத்து துறை, தீயணைப்பு துறை, வனத்துறை, தேசிய மாணவர் படை (NCC), ஸ்கவுட்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு குழுக்கள் பங்கேற்றன. தாளமிட்ட இசையில், படிப்படியாக முன்னேறும் வீர அணிவகுப்புகள் அனைவரின் கவனத்தையும் இருக்கும்படி இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில், காவல் துறை உயர் அதிகாரிகள் அணிவகுப்பை பரிசோதித்து, சுதந்திர தின விழா நடைபெறும் நாளில் எந்த குறையும் இன்றி நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்பதற்காக விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினர்.
தேசிய ஒற்றுமை, தேசப்பற்று ஒழுங்கு ஒத்திகையால் வெளிப்பட்டது. வரும் ஆகஸ்ட் 15 – ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழா, இதன் மூலம் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
