கோவை நகரிலுள்ள பெரியகடை வீதி காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளரின் அறைக்குள் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.இறந்து போன நபர் மனநிலை சரியில்லாதவர் என்றும், காவல் பணியில் இருந்த காவலருக்குத் தெரியாமல் மாடிக்குச் சென்று உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், இது லாக்கப் மரணம் இல்லை எனவும் காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட நபர், தற்கொலை செய்வதற்கு முன்பாக அப்பகுதியில் நடமாடியது தொடர்பான காட்சிகளை சிசிடிவி மூலமாகக் கண்டறிந்துள்ளதாக கூறும் காவல்துறையினர், அவர் மாடிக்குச் சென்றதை அதிகாரிகள் கவனிக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *